

செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்து அவசர காரணங்களுக்காக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி தாயகம் திரும்பி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடருக்கான அணியினருடன் விராட் கோலியும் சென்றிருந்தார். வரும் 26-ம் தேதி செஞ்சுரியன் நகரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியஅணி விளையாட உள்ளது. இதையொட்டி இந்திய அணியினர், இந்தியா ஏ அணியினருடன் இணைந்து 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விராட் கோலி கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் அவர், தனது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசரநிலை காரணமாக தென் ஆப்பிரிக்காவிலிருந்து தாயகம் திரும்பி உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.