10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் லதா

10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் லதா

Published on

சென்னை: சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி துறை சார்பில் லட்சுமணசாமி முதலியார் பொன்விழா நினைவு தடகளப்போட்டி மேலக்கோட்டையூரில் நடைபெற்று வருகிறது.

இதன் 2-வது நாளான நேற்று மகளிருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி மாணவியான டி.லதா, பந்தய தூரத்தை 37:42.27 விநாடிகளில் கடந்து 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட சாதனையை முறியடித்து புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். எத்திராஜ் மாணவி மித்ரா (38:52.84) 2-வது இடமும், எம்ஓபி வைஷ்ணவா மாணவி கீதாஞ்சலி (40:20.04) 3-வது இடமும் பிடித்தனர்.

100 மீட்டர் ஓட்டத்தில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி மாணவியான பி.மரியா நிவேதா பந்தய தூரத்தை 11.88 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான குண்டு எறிதலில் லயோலா கல்லூரி மாணவரான சூர்ய பிரகாஷ் 16.15 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். மகளிருக்கான 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் லயோலா மாணவி ஸ்ரீ ரேஷ்மா (14.41 விநாடிகள்) முதலிடமும், எம்ஓபி வைஷ்ணவா மாணவி கே.நந்தினி (14.68) 2-வது இடமும் பிடித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in