

மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி கடந்த வாரம் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி மோத உள்ள டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 46 வருட வரலாற்றில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள போதிலும் ஒன்றில் கூட வெற்றி பெற்றது இல்லை. கடைசியாக ஆஸ்திரேலிய அணி கடந்த 1984-ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தது. இந்த ஆட்டமும் வான்கடே மைதானத்தில்தான் நடைபெற்றிருந்தது.