Published : 09 Jan 2018 10:19 AM
Last Updated : 09 Jan 2018 10:19 AM

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட் தொடர்: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி, டான் போஸ்கோ வெற்றி

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட் தொடரில் திருநெல்வேலியில் நடைபெற்ற 2-ம் கட்ட ஆட்டங்களில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அணி, சென்னை டான் போஸ்கோ அணிகள் வெற்றி கண்டன.

முத்தூட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் மாநிலம் முழுவதும் இருந்து 72 பள்ளிகள் பங்கேற்றுள்ள ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது.

முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஜேஎஸ்கே 2-வது சுற்று ஆட்டங்கள் திருநெல்வேலி நகரில் தொடங்கின.

2-வது நாளாக நேற்று நடைபெற்ற ஆட்டமொன்றில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் நீலாம்பாள் மேல்நிலைப்பள்ளி அணியை வென்றது.

முதலில் ஆடிய நீலாம்பாள் அணி 20 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணி வீரர் டி. சண்முகம் 47 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். ஜான் ஜெரால்டு 13 ரன்கள் தந்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய ஜெயேந்திர சரஸ்வதி அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. டி. அஸ்வத் 30 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

முத்தூட் வழங்கும் ஆட்டநாயகன் விருதை ஜான் ஜெரால்டு பெற்றார். முத்தூட் வழங்கும் உற்சாக வீரர் விருது டி. சண்முகத்துக்கு கிடைத்தது.

மற்றொரு ஆட்டத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் பாய்ஸ் மேல்நிலைப்பள்ளி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கடலூர் ஜவஹர் சிபிஎஸ்இ பள்ளி அணியை வென்றது.

முதலில் ஆடிய திருச்சி ஸ்ரீரங்கம் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. விக்னேஸ்வரன் 42 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஆடிய ஜவஹர் அணி 12.4 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சுதர்சன் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். ஆட்டநாயகன் விருதும் சுதர்சனுக்கு கிடைத்தது. திருமணிவாசன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். உற்சாக வீரர் விருது ஜவஹர் பள்ளியின் ஆதர்ஷுக்கு(30 பந்துகளில் 45 ரன்கள்) கிடைத்தது.

பிறிதொரு ஆட்டத்தில் சென்னை டான் போஸ்கோ அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் மதுரை லே-சேட்லியர் அணியை வென்றது. முதலில் ஆடிய லே-சேட்லியர் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது.

ஸ்ரேயாஸ், ஆஷ்ரித் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர் ஆடிய டான் போஸ்கோ 11.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கணேஷ் 43 பந்துகளைச் சந்தித்து 46 ரன்கள் எடுத்தார். விஷால் 19 பந்துகளைச் சந்தித்து 38 ரன்களைக் குவித்தார்.

ஆட்டநாயகன் விருது கணேஷுக்கும், உற்சாக வீரர் விருது 26 ரன்கள் எடுத்த சுர்ஜித் சூர்யாவுக்கும் (லே-சேட்லியர்) கிடைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x