

ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. இதுகுறித்து மிட்செல் ஸ்டார்க் கூறும் போது, “ஐபிஎல் ஏலத்தில் ரூ.24.75 கோடிக்கு எடுக்கப்படுவேன் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. இந்தச் செய்தி முதலில் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
அதிக அளவிலான தொகைக்கு என்னை எடுத்திருப்பதால் எனக்கு அழுத்தம் இருக்கும் என்பது மட்டும் உறுதி. ஐபிஎல் போட்டிகளில் சில ஏற்றத்தாழ்வுகள் வந்து செல்லும். என்னுடைய திட்டங்கள் பெரும்பாலும் மாறாது. பாட் கம்மின்ஸ் கொல்கத்தா அணியில் விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவேன் என்று நம்புகிறேன்” என்றார்.