

சென்னை: ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி ஏலத்தில் சமீர் ரிஸ்வி என்ற அறிமுகமில்லாத இளம் வீரரை ரூ.8.4 கோடி கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி ஏலத்தின் 6வது செட்டில் சர்வதேச போட்டியில் அறிமுகமில்லாத பேட்டர்கள் ஏலம் விடப்பட்டனர். இந்த சுற்றில் முதல் வீரராக சுபம் துபே
அடிப்படை தொகையான இருபது லட்சத்துக்கு ஏலத்திற்கு விடப்பட்டார். அவரை ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே கடும் போட்டியிட்ட நிலையில் இறுதியில் ரூ.5.8 கோடிக்கு சுபம் துபேவை கைப்பற்றியது ராஜஸ்தான். இதேபோல் இதேபோல் மற்றொரு இளம் பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வியை ரூ.8.4 கோடி கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இருபது லட்சத்தில் தொடங்கிய ஏலத்தில் சமீர் ரிஸ்வியை கைப்பற்ற சென்னை, டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி 9 டி20 போட்டிகளில் விளையாடி 189 ஸ்ட்ரைக் ரேட் உடன் 455 ரன்கள் குவித்துள்ளார்.
அங்கிரிஷ் ரகுவன்ஷியை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு வாங்கிய கொல்கத்தா அணி. அர்ஷின் குல்கர்னியை லக்னோ அணி ரூ.20 லட்சத்துக்கு கைப்பற்றியது. அதேநேரம் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் சர்ப்ராஸ் கானை எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதேபோல் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்த ராஜ் அங்கத் பாவாவையும் எந்த அணிகளும் வாங்கவில்லை. கடந்த முறை பஞ்சாப் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் ஷாருக் கானை இம்முறை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. 40 லட்ச ரூபாயில் தொடங்கிய ஏலத்தில் ரூ.7.40 கோடி கொடுத்து குஜராத் அணி ஷாருக் கானை வசப்படுத்தியது. ராமன்தீப் சிங் ரூ.20 லட்சத்துக்கு கொல்கத்தா நிர்வாகம் வாங்கியது.
டாம் கோஹ்லர்-காட்மோரை ரூ.40 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது. ரிக்கி புய் என்ற இளம் விக்கெட் கீப்பரை டெல்லி அணி ரூ.20 லட்சத்துக்கு வசப்படுத்தியது. ஜார்கண்ட் மாநிலத்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குமார் குஷாக்ரா இந்த ஏலத்தில் கவனம் ஈர்த்தார். அதிரடியாக விளையாடும் இவரை ரூ.7.20 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் வாங்கியது. இடதுகை வேகப்பந்து வீச்சாளரான யஷ் தயாளை ஆர்சிபி ரூ.5 கோடிக்கு வசப்படுத்தியது. இதேபோல் சுஷாந்த் மிஸ்ராவை ரூ.2.20 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகாஷ் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு கைப்பற்றியது. கார்த்திக் தியாகியை ரூ.60 லட்சத்துக்கு குஜராத் அணி வாங்கியது. இந்த செட்டின் கடைசி வீரரான ராசிக் தர்ரை ரூ.20 லட்சத்துக்கு டெல்லி அணி வசப்படுத்தியது.
முக்கிய அம்சங்கள்: