ஜூனியர் ஹாக்கியில் இந்திய அணி தோல்வி

ஜூனியர் ஹாக்கியில் இந்திய அணி தோல்வி
Updated on
1 min read

கோலாலம்பூர்: ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஜெர்மனியுடன், இந்திய அணி நேற்று மோதியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிதோல்வி அடைந்தது.இந்திய அணி தரப்பில் 11-வது நிமிடத்தில் சுதீப் சிர்மாகோ கோல் அடித்தார். இந்திய அணிக்கு 12 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அவற்றில் ஒன்றை கூட இந்திய அணியால் கோலாக மாற்ற முடியவில்லை. மாறாக ஜெர்மனி அணி தனக்கு கிடைத்த இரு பெனால்டி கார்னர்களையும் கோலாக மாற்றியது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in