Published : 15 Dec 2023 05:38 AM
Last Updated : 15 Dec 2023 05:38 AM

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் | லெவோன் அரோனியனுடன் குகேஷ் இன்று மோதல்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி இன்று (15-ம் தேதி) சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் தொடங்குகிறது. வரும் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கிராண்ட்மாஸ்டர்களான இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, டி.குகேஷ், பி.ஹரிகிருஷ்ணா, ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ, அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஹங்கேரியின் சனான் சுகிரோவ், உக்ரைனின் பாவெல் எல்ஜனோவ், செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கே ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த தொடரானது டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி ஆகியோருக்கு கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பாக அமையும் எனகருதப்படுகிறது. தொடரின் முதல்சுற்றில் இன்று டி.குகேஷ்,லெவோன் அரோனியனுடன் மோதுகிறார். மற்ற ஆட்டங்களில் அர்ஜுன்எரிகைசி - பி.ஹரிகிருஷ்ணா, சனான் சுகிரோவ் - அலெக்சாண்டர் ப்ரெட்கே, பாவெல் எல்ஜனோவ் - பர்ஹாம் மக்சூட்லூ ஆகியோர் மோதுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x