Published : 13 Dec 2023 07:05 AM
Last Updated : 13 Dec 2023 07:05 AM

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் | பெங்களூருடன் சென்னையின் எப்சி இன்று மோதல்

பயிற்சியில் பெங்களூரு வீரர்கள்

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 8 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - பெங்களூரு எப்சி அணிகள் மோதுகின்றன.

சென்னையின் எப்சி இந்த சீசனில் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 டிரா, 4 தோல்விகளுடன் 9 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் பெங்களூரு 9 ஆட்டங்களில் பங்கேற்று ஒருவெற்றி, 4 டிரா, 4 தோல்விகளுடன் 7 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடம் வகிக்கிறது. சென்னை அணி தனது கடைசி 3 ஆட்டங்களையும் டிராவில் முடித்த நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது.

சென்னை அணி கடைசி 3 ஆட்டங்களில் 6 கோல்கள் அடித்தது. ஆனால் முக்கியமான கட்டங்களில் எதிரணியிடம் இருந்து கோல்களை வாங்குவது பலவீனமாக உள்ளது.

சொந்த மண்ணில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணி இதற்கு தீர்வு காண முயற்சிக்கக்கூடும். ஐஎஸ்எல் தொடரில் இரு அணிகளும் இதற்கு முன்னர் 13 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னை அணி 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி 7 ஆட்டங்களில் வாகை சூடியிருந்தது. 3 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்திருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x