Published : 16 Jan 2018 09:39 AM
Last Updated : 16 Jan 2018 09:39 AM
80-வது டாடா ஸ்டீவ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-வது சுற்றில் இந்திய வீரரும், உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்தார்.
இந்தப் போட்டி நெதர்லாந்திலுள்ள விஜ்க் ஆன் ஜீ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்றின்போது விஸ்வநாதன் ஆனந்த், ரஷிய வீரர் செர்கே கர்ஜாகினை எதிர்த்து விளையாடினார்.
இந்த சுற்றில் இருவரும் சிறப்பாகவே விளையாடினர். இறுதியில் இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 2-வது சுற்றின் முடிவில் ஆனந்த். 1.5 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார். நார்வேயின் மேக்னஸ் கார்ல்ஸன், அஜர்பைஜானின் ஷக்ரியார் மாமெட்யாரோவ் ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் ஆனந்துடன் 2-ம் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
ஹாலந்து வீரர் அனிஷ் கிரி 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த சுற்றில் இந்திய வீரர் அதிபன் தோல்வி கண்டார். மேக்னஸ் கார்ல்ஸன் அவரை வீழ்த்தினார்.
இந்திய வீராங்கனை டி.ஹரிகா இந்த சுற்றில் நெதர்லாந்து வீரர் பெஞ்சமின் போக்குடன் டிரா கண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT