தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் | தங்கம் வென்றது தமிழக ஆடவர் அணி: மகளிர் அணிக்கு வெண்கலம்

தங்கம் வென்ற தமிழக அணி வீரர்கள்
தங்கம் வென்ற தமிழக அணி வீரர்கள்
Updated on
1 min read

லூதியானா: 73-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள குருநானக் தேவ் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் தமிழக அணி தங்கம் வென்றது. மகளிர் பிரிவில் தமிழக அணி வெண்கலம் வென்றது.

இறுதிப் போட்டியில் ரயில்வே ஆடவர் அணியை 72-67 என்ற கணக்கில் வீழ்த்தியது தமிழக அணி. மகளிர் பிரிவில் ரயில்வே அணி கேரளாவை வீழ்த்தி தங்கம் வென்றது. தங்கம் வென்ற அணிக்கு ரூ.5,00,000 பரிசு வழங்கப்பட்டது. மகளிர் பிரிவில் மூன்றாவது இடத்தை தமிழக அணி பிடித்து, வெண்கலம் வென்றது.

கர்நாடக அணிக்கு எதிராக தமிழக மகளிர் அணி வெற்றி பெற்றது. 65-54 என்ற கணக்கில் தமிழக மகளிர் அணி வெண்கலம் வென்றது. தமிழக வீரர் பாலதனேஸ்வரர் மற்றும் ரயில்வே மகளிர் அணி வீராங்கனை பூனம் ஆகியோர் மோஸ்ட் வேல்யூயபிள் பிளேயர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். அதனால் அவர்கள் இருவருக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது.

வெண்கலம் வென்ற தமிழக மகளிர் அணி
வெண்கலம் வென்ற தமிழக மகளிர் அணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in