

சென்னை: இந்தியாவின் முதல் இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் இன்றும், நாளையும் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பார்முலா 4 கார் பந்தயங்கள் ஒத்திவைக்கப்படுவதாக கடந்த 5-ம் தேதி தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பந்தயங்கள் கால வரையரையின்றி எந்தத் தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.