விளையாட்டு
சமீரை ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது சென்னை பிளிட்ஸ்
பெங்களூரு: பிரைம் வாலிபால் லீக் 3-வது சீசன் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சென்னை பிளிட்ஸ் அணியானது யு-21 வீரரான சமீரை (செட்டர்) ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இதேபோன்று அட்டாக்கரான அமன் கவுரை கொச்சி அணி ரூ.18 லட்சத்துக்கு வாங்கியது.
சென்னை பிளிட்ஸ் அணி ஆர்.பிரபாகரன் (லிபெரோ), ஹிமான்ஷு தியாகி (அட்டாக்கர்) ஆகியோரை தலா ரூ.3 லட்சத்துக்கும், சூர்யன் நாஞ்சிலை (செட்டர்) ரூ.2.6 லட்சத்துக்கும், ஜோயல் பெஞ்சமினை (அட்டாக்கர்) ரூ.2 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தது.
