Published : 06 Dec 2023 06:03 AM
Last Updated : 06 Dec 2023 06:03 AM

பாட்மிண்டன் தரவரிசை பட்டியலில்: அஸ்வினி, தனிஷா ஜோடி முன்னேற்றம்

புதுடெல்லி: பாட்மிண்டன் உலகத் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 4 இடங்கள் முன்னேறியது.

உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மகளிருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா ஜோடி 4 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஜோடி கடந்தவாரம் நடைபெற்ற சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடரில் 2-வது இடம் பிடித்திருந்தது. இதனால் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் ஓர் இடம் முன்னேறி 30-வது இடத்தை பிடித்துள்ளார். சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடரில் பிரியன்ஷு ரஜாவத் அரை இறுதி சுற்று வரை முன்னேறியிருந்தார். மற்ற இந்திய வீரர்களான ஹெச்.எஸ்.பிரனோய் 8-வது இடத்திலும், லக்சயா சென் 17-வது இடத்திலும், கிடாம்பி காந்த் 24-வது இடத்திலும் தொடர்கின்றனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 12-வது இடத்தில் நீடிக்கிறார். ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் சாட்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 2-வது இடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. மகளிருக்கான இரட்டையர் பிரிவில் ட்ரீஸா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 19-வது இடத்தில் தொடர்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x