Published : 05 Dec 2023 08:11 AM
Last Updated : 05 Dec 2023 08:11 AM

ஆஸி.க்கு எதிரான தொடரில் வீரர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தோம்: கேப்டன் சூர்யகுமார் யாதவ்

பெங்களூரு: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைகிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள்மோதிய 5 போட்டிகள் கொண்டசர்வதேச டி20 தொடர் நடைபெற்றது. 4 போட்டிகள் முடிந்த நிலையில் இந்தத் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றுவிட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் 5-வது மற்றும் கடைசிடி 20 ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்றது. இதையடுத்து டி 20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியஅணி கைப்பற்றியது.

கடைசி டி 20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது.ஸ்ரேயஸ் ஐயர் 53, ஜிதேஷ் சர்மா 24, அக்சர் படேல் 31 ரன்கள் எடுத்தனர். பின்னர் 161ரன்கள் எடுத்தால் வெற்றி என்றஇலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அர்ஷ்தீப்சிங் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்தடி 20 தொடர் இந்தியஅணிக்கு சிறப்பான ஒன்றாக அமைந்தது. இந்திய வீரர்கள்அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதேபோல் களத்தில் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்று தெளிவாக இருந்தோம்.அதை களத்திலும் செயல்படுத்தி வெற்றி பெற்றோம்.

எங்கள் அணி வீரர்களிடம், உங்களுக்கு எது சரியென்று தெரிகிறதோ, அதை செய்து மகிழ்ச்சியுடன் ஆட்டத்தை விளையாடுங்கள் என்று சுதந்திரம் கொடுத்தோம்.

அவர்களும் அதைத்தான் செய்தார்கள். அதுதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். தீபக்சாஹர் அவசர மருத்துவ பரிசோதனைக்காக சென்றதால் அவர்இடத்தில் அர்ஷ் தீப் சிங்குக்குவாய்ப்பு கொடுக்கப்பட்டது.

கடைசி ஓவரை மிகச் சிறப்பாக வீசினார் அர்ஷ்தீப் சிங். மேத்யூ வேட் விக்கெட்டையும் வீழ்த்தியதால் கடைசி ஓவரில் நாங்கள் அபார வெற்றியைப் பெற்றோம்.அணி வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்திய விதம்பாராட்டுக்குரியது.

நாங்கள் களத்தில் பயமின்றி இருக்க விரும்பினோம். அதைச் செய்தோம். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 200-க்கும் அதிகமான ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தால் கூட டி20 போட்டிகளில் சேசிங் எளிதாக இருக்கும்.ஆனால் 160 ரன்கள் என்ற இலக்கை நாங்கள் பாதுகாத்தோம். அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x