இந்தியா - ஆஸி. போட்டி நடைபெற்ற ராய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் ரூ.3.16 கோடி மின் கட்டண பாக்கி

இந்தியா - ஆஸி. போட்டி நடைபெற்ற ராய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் ரூ.3.16 கோடி மின் கட்டண பாக்கி
Updated on
1 min read

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஷாகீத் வீர் நாராயண் கிரிக்கெட் மைதானம் உள்ளது. இங்கு நேற்றுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடத்தப்பட்டது. இந்த மைதானத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் மின் கட்டண பாக்கியைச் செலுத்தவில்லை.

இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. தற்போது ரூ.3.16 கோடிக்கு மின் கட்டண பாக்கியை ராய்ப்பூர் கிரிக்கெட் மைதான நிர்வாகம் செலுத்த வேண்டியுள்ளது.

நேற்று போட்டி நடந்ததையடுத்து தற்காலிக மின் இணைப்பு பெற்று கேலரி பகுதிகளுக்கான விளக்குகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது. அதே நேரத்தில்மைதானத்தின் நான்கு புறங்களிலும் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்குகளுக்கு ஜெனரேட்டர் மூலமே மின்சார வசதி வழங்கப்பட்டது.

இந்த மைதானத்தின் பராமரிப்புப் பணிகள் மாநில பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேவேளையில் எஞ்சியுள்ள செலவுகளை மாநில விளையாட்டு மேம்பாட்டுத்துறை கவனிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மின் கட்டண பாக்கியைச் செலுத்துவதில் 2 துறைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 2 துறை அதிகாரிகளும் மின் கட்டணத்தைச் செலுத்தாமல் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக மின் வாரியம் பல முறை நோட்டீஸ்களை மாநில பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பியும் பணம் செலுத்தவில்லை. மைதானத்தில் மின் விநியோகம் 2018-ம் ஆண்டு நிறுத்திய பிறகு இதுவரை இங்கு 3 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in