Published : 02 Dec 2023 07:21 AM
Last Updated : 02 Dec 2023 07:21 AM

புரோ கபடி இன்று தொடக்கம்!

புரோ கபடியில் கலந்து கொள்ளும் 12 அணிகளின் கேப்டன்களும் கோப்பையுடன் கொடுத்த உற்சாக போஸ்.

அகமதாபாத்: புரோ கபடி லீக்கின் 10-வது சீசன் போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ் ஸ்டேடியா மைதானத்தில் இன்று தொடங்குகின்றன. 12 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் - தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் யு மும்பா - யுபி யோதாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி வரை நடைபெறுகின்றன. மொத்தம் 12 நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த சீசனின் மொத்த பரிசுத் தொகை ரூ. 8 கோடி ஆகும். இதில் பட்டம் வெல்லும் அணி ரூ.3 கோடியை தட்டிச் செல்லும். 2-வது இடத்தை பெறும் அணி ரூ.1.8 கோடியை பெறும்.

அரை இறுதியில் தோல்வியை சந்திக்கும் அணிகளுக்கு தலா ரூ.90 லட்சமும், 5-வது மற்றும் 6-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.45 லட்சமும் கிடைக்கும். சாகர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை (3-ம் தேதி) டெல்லி தபாங்குடன் மோதுகிறது.

அதேவேளையில் சொந்த மண்ணில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் டிசம்பர் 22-ல் பாட்னா பைரேட்ஸுடன் விளையாடுகிறது. இந்த ஆட்டம் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x