Published : 26 Jan 2018 12:46 PM
Last Updated : 26 Jan 2018 12:46 PM

முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடர்: இறுதி போட்டியில் இலங்கை

முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் வங்கதேச அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் டாக்காவில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 24 ஓவர்களில் 82 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக முஸ்பிஹூர் ரகிம் 26, சபிர் ரஹ்மான் 10 ரன்கள் சேர்த்தனர். தமிம் இக்பால் 5, அனாமுல் ஹக் 0, ஷகிப் அல் ஹசன் 8, மஹ்மதுல்லா 7, அபுல் ஹசன் 7, நசீர் ஹோசைன் 3, மோர்டசா 1, ரூபல் ஹோசைன் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி தரப்பில் சுரங்கா லக்மல் 3 விக்கெட்களும் சமீரா, பெரேரா, சந்தகன் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் கைப்பற்றினர். 83 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 11.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. குணதிலகா 35, உபுல் தரங்கா 39 ரன்கள் சேர்த்தனர். 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x