Published : 28 Nov 2023 07:58 AM
Last Updated : 28 Nov 2023 07:58 AM
சென்னை: ஆடவருக்கான 36-வது தேசிய சீனியர் அட்யா பட்யா மற்றும் மகளிருக்கான 32-வது சீனியர் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்றைய போட்டியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரக சென்னை பிரிவின் காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம் தொடங்கி வைத்தார். ஆடவர் பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, பீகாரை எதிர்த்து விளையாடியது. இதில் தமிழக அணி 28-8, 32-12 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் கர்நாடகாவை சந்தித்தது தமிழக அணி. இதில் 16-12, 10-11,12-10 என்ற புள்ளிகள் கணக்கில் 2-வது வெற்றியை பதிவு செய்தது தமிழக ஆடவர் அணி. மகளிர் பிரிவில் தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் 9-6,12-7 என்ற கணக்கில் சண்டிகர் அணியை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் தமிழக மகளிர் அணி மகாராஷ்டிராவை எதிர்த்து விளையாடியது.
இதில் தமிழக அணி 16-21, 25-10, 14-16 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிராவிடம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் தமிழக மகளிர் அணி 11-9, 10-9 என்ற கணக்கில் குஜராத்தை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT