

90-வது தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற சப்-ஜூனியர் ஸ்னூக்கர் பிரிவில் தமிழக வீரர் அப்துல் சைஃப் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் அவர், சப்-ஜூனியர் பில்லியர்ட்ஸ் பட்டத்தை வென்ற குஜராத்தைச் சேர்ந்த மயூர் கார்க்குடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில்4-3 (56-55, 69-48, 38-70, 30-60, 54-40, 7-60, 64-61) என்ற கணக்கில் அப்துல் சைஃப் வெற்றி பெற்றார்.
சென்னையைச் சேர்ந்த அப்துல் சைஃப் கூறும்போது, "100 சதவீதம் வெற்றி பெறுவோம் என்ற முனைப்புடனே இறுதி போட்டியில் விளையாடினேன். தேசிய அளவிலான போட்டியில் எனது முதல் பட்டம் இது” என்றார்.