ரூ. 7.6 கோடி கொடுத்து அஸ்வினை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி: சி.எஸ்.கே பின்வாங்கியது

ரூ. 7.6 கோடி கொடுத்து அஸ்வினை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி: சி.எஸ்.கே பின்வாங்கியது
Updated on
1 min read

ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை கிங்ஸ் 11 பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. கடும் போட்டிக்கு இடையே ரூ. 7.6 கோடி கொடுத்து அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

ஏற்கனவே சென்னை அணி 3 வீரர்களை ரைட் டு மேட்ச் மூலம் அணிக்காக தக்கவைத்துள்ளதால், அஸ்வினை ஏலத்தில்தான் எடுக்க வேண்டும் என்ற நிலை உருவானது. சில நாட்களுக்கு முன், சென்னை அணியின் கேப்டன் தோனியும், அஸ்வினை ஏலத்தில் எடுக்க முன்னுரிமை தருவோம் என்று கூறியிருந்தார்.

இன்று,(சனிக்கிழமை) முதல் கட்ட ஏலத்தில் ஷிகர் தவானுக்குப் பிறகு அஸ்வின் ஏலத்துக்கு வந்தார். ஆரம்பத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே அஸ்வினை எடுக்க கடும் போட்டி இருந்தது. ஆனால் ஏலத்தொகை 4 கோடியை தாண்டியவுடன் சென்னை அணி பின் வாங்கியது.

தொடர்ந்து ராஜஸ்தான் அணி 4.2 கோடியுடன் போட்டியில் குதித்தது. ஆனால் ஏலத் தொகை ரூ. 5, 6, 7 என கோடிகளைத் தாண்ட போட்டி மும்முரமானது. கடைசியில் ரூ. 7.6கோடிக்கு அஸ்வினை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி.

முன்னதாக ஷிகர் தவானை ரூ. 5.2 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in