Published : 24 Jan 2018 10:00 am

Updated : 24 Jan 2018 13:21 pm

 

Published : 24 Jan 2018 10:00 AM
Last Updated : 24 Jan 2018 01:21 PM

பிப். 4-ல் ஓஎம்ஆர் மாரத்தான்

4

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை அப்ஸ்கேல் அமைப்பின் சார்பில் ஓஎம்ஆர் மாரத்தான் போட்டி வரும் பிப்ரவரி 4-ம் தேதி பழைய மகாபலிபுரம் சாலை சுற்றுப் பகுதிகளில் நடைபெற உள்ளது.

3, 5 மற்றும் 10 கி.மீ. பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. பந்தய தொலைவை நிறைவு செய்யும் அனைவருக்கும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் டி-சர்ட், சிற்றுண்டி, பேக் மற்றும் ஓஎம்ஆர் பகுதியில் உள்ள பிரபல ஸ்டோர்களின் தள்ளுபடி கூப்பன்கள் உள்ளிட்டவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 4000 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் இம்முறை 6 ஆயிரம் முதல் 8000 பேர் வரை பங்கேற்கக்கூடும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

போட்டிகள் சத்தியபாமா கல்லூரியில் தொடங்கி அதே கல்லூரியில் நிறைவடையும். சோழிங்கநல்லூரர் வழியாக பழைய மகாமலிபுரம் சாலையைக் கடந்து பின்னர் ஷெல் பெட்ரோல் பங்க் வழியாக திரும்பும் வகையில் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்தத் போட்டியில் கலந்துகொள்வதற்கான நுழைவுக் கட்டணம் ரூ.750 ஆகும். மாணவர்களுக்கு சலுகை கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாரத்தான் போட்டியின் வாயிலாக கிடைக்கும் தொகையை ஓஎம்ஆர் பகுதியில் பின்தங்கிய நிலையில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி, சுகாதாரம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை அப்ஸ்கேல் அமைப்பின் ஆளுநர் சீனிவாசன் தெரிவித்தார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author