Published : 23 Nov 2023 07:23 AM
Last Updated : 23 Nov 2023 07:23 AM
சென்னை: ஆடவருக்கான 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடை
பெற்று வருகிறது.
இதன் 6-வது நாளான நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சத்தீஸ்கர் 11-3 என்ற கோல் கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தியது. அந்த அணி சார்பில் ஜூனைத் அகமது
3 கோல்களும், சுக்தேவ் நிர்மல்கர் மற்றும் ஹோகேஷ்வர் ஆகியோர் தலா 2 கோல்களும் அலி அர்பஜ், அஜய் தண்டி, தவூஃபிக் அகமது, ரோஹித் ரஜக் ஆகியார் தலா ஒரு கோலும் அடித்தனர். சத்தீஸ்கர் அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்த அந்த அணி கால் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. ‘ஏ’ பிரிவில் இருந்து ஹரியாணா 2 வெற்றிகளுடன் ஏற்கெனவே கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தது.
‘சி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தாத்ரா & நாகர்ஹவேலி மற்றும் டாமன் & டையூ அணி 7-1 என்ற கோல் கணக்கில் பிஹார் அணியை வென்றது. பிஹார் அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. அதேவேளையில் தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ அணி ஆறுதல் வெற்றியுடன் தொடரில் இருந்து வெளியேறியது. ‘சி’ பிரிவில் கர்நாடகா 2 வெற்றிகளுடன் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. ‘இ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்கால் - ஜம்மு & காஷ்மீர் அணிகள் மோதின. இதில் பெங்கால் 10-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்கால் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.
எஃப் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் - சத்தீஸ்கர் அணிகள் மோதின. இதில் ஜார்க்கண்ட் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் கெர்
கெட்டா பிரேம், அனுருத் பெங்ரா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஜார்க்கண்ட் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. ‘ஹெஎச்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தெலங்கானா 15-0 என்ற கோல் கணக்கில் அருணாச்சல பிரதேசத்தை தோற்கடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT