அல்டிமேட் கோ கோ போட்டி: சென்னை வீரர்கள் தேர்வு

அல்டிமேட் கோ கோ போட்டி: சென்னை வீரர்கள் தேர்வு
Updated on
1 min read

புவனேஷ்வர்: அல்டிமேட் கோ கோ சீசன் 2 அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஒடிசா ஜக்கர்நாட்ஸ், தெலுங்கு யோதாஸ், சென்னை குயிக் கன்ஸ், ராஜஸ்தான் வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை கிலாடிஸ் ஆகிய 6 அணிகள் கலந்துகொள்கின்றன.

இந்நிலையில் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் புவனேஷ்வரில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்காக 18 மாநிலங்களில் இருந்து மொத்தம் 290 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் இருந்து 145 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதற்காக 6 அணிகளின் உரிமையாளர்கள் கூட்டாக ரூ.3.9 கோடி செலவிட்டனர்.

சென்னை குயிக் கன்ஸ் அணியானது சீசன் 1-ல் சிறப்பாக விளையாடிய அமித் பாட்டீல், மதன் மற்றும் ராம்ஜி காஷ்யப் ஆகியோரை ஏற்கனவே தக்கவைத்திருந்தது. இவர்களுடன் லட்சுமண் கவாஸ், ஆதர்ஷ் மோஹிதே, சச்சின் பார்கோ, ஜோரா சூரஜ், சூரஜ் லாண்டே, ஆதித்யா குடேல், துர்வேஷ் சாலுங்கே, சந்து சாவ்ரே, ஆகாஷ் கடம், நரேந்திர கட்கேட், முஸ்தபா பக்வான், அர்ஜுன் சிங், விஜய் ஷிண்டே, ஆஷிஷ் பட்டேல், எம்.முகிலன், ஆகாஷ் பால்யன், சுமன் பர்மான், பவன் குமார், கிரி ஆகியோரையும் சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in