இங்கிலாந்து அணியில் மீண்டும் பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணியில் மீண்டும் பென் ஸ்டோக்ஸ்
Updated on
1 min read

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என இழந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் மார்ச் மாதம் கடைசியில் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். மேலும் லான்ஷையர் அணியை சேர்ந்த 24 வயது பேட்ஸ்மேனான லயிம் லிவிங்ஸ்டோன் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஷஸ் தொடரில் இடம் பெற்ற மொயின் அலி, ஜேம்ஸ் வின்ஸ், மார்க் ஸ்டோன்மேன் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

அதேவேளையில் கேரி பாலன்ஸ், ஜேக் பால், டாம் குரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப் பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கும் அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராடு, அலாஸ்டர் குக், மேசன் கிரேன், பென் போக்ஸ், லியிம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், கிரெய்க் ஓவர்டன், பென் ஸ்டோக்ஸ், மார்க் ஸ்டோன்மேன், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ்வோக்ஸ், மார்க் வுட். - ஏஎப்பி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in