

நாளை 3வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதனையடுத்து தோனி என்ன செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இது குறித்து ஆங்கில இணையதளம் ஒன்றில் கங்குலி எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போதே தோனி இதனைக் கற்றுக் கொண்டிருப்பார். ஜொகான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பேட் செய்தார். ஏறக்குறைய அந்த டெஸ்ட் போட்டியையே வென்றிருப்பார்.
லார்ட்ஸ் டெஸ்டில் குக் டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். அது தோல்வியில் முடிந்தது. தோனியும் டாஸ் வென்றிருந்தால் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்திருப்பார்.
இங்குதான் தோனிக்கு முக்கியப் பாடம் அமைந்தது, அயல்நாடுகளில் பவுலர்களுக்குச் சாதகமான பிட்சில் முதலில் பேட் செய்து நெருக்கடிகளை சமாளித்து விட்டால் எதிரணியினரை அதன் பிறகு நெருக்கடிக்குட்படுத்தி 4வது இன்னிங்ஸில் நாம் பேட் செய்ய வேண்டிய நிலை ஏற்படாத சூழ்நிலை மிக முக்கியம்.
ஆகவே பேட்டிங்-பந்து வீச்சு இரண்டிற்கும் 50-50 வாய்ப்பு இருக்கும் பிட்ச்களில் எப்போதும் முதலில் பேட் செய்வதே சிறந்தது. இந்த வழியில்தான் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி சாத்தியம்.
துவக்க நாளில் ரிஸ்க் எடுத்தால் அதன் பலனை 4ஆம் நாள் 5ஆம் நாள் ஆட்டத்தில் அனுபவிக்கலாம். லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றியில் அதுதான் நடந்தது.
இவ்வாறு கூறியுள்ளார் கங்குலி.