

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி என இரு பதக்கங்கள் கிடைத்தன.
இந்தியாவின் அபூர்வி சான்டிலா தங்கப் பதக்கமும், அயோனிகா பால் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். அபூர்வி சான்டிலா 206.7 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றதோடு மட்டுமல்லாமல், புதிய காமன்வெல்த் சாதனையையும் படைத்துள்ளார். அயோனிகா பால் 204.9 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தார்.
தகுதிச்சுற்றில் 415.6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த சான்டிலா, இறுதிச்சுற்றில் ஒவ்வொரு ரவுண்டி லும் சராசரியாக 10.2 புள்ளிகள் முதல் 10.7 புள்ளிகள் வரை பெற்றார். அயோனிகா முதல் 10 ரவுண்டுகள் வரை பதக்கம் வெல்வதற்கான போட்டியிலேயே இல்லை. ஆனால் அடுத்த 10 ரவுண்டுகளில் அபாரமாக செயல்பட்ட அயோனிகா, வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதே பிரிவில் மலேசியாவின் முகமது தைபி 184.4 புள்ளிகளுடன் வெண் கலப் பதக்கம் வென்றார்.