

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா அபாரமாக செயலாற்றி வருகிறது 50மீ ரைபிள் புரோன் பிரிவில் இந்தியாவின் ககன் நரங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
நரங் கடைசி வரை தங்கம் வெல்லும் நிலையில் இருந்தார். ஆனால் ஆஸ்திரேலிய வீரர் வாரன் பொடெண்ட் அவரை விடவும் சற்றே சிறப்பாக விளையாடி தங்கம் வென்றார்.
இங்கிலாந்தின் கென்னத் பார் வெண்கலம் வென்றார். வாரன் பொடெண்ட் 204.3 புள்ளிகள் எடுக்க ககன் நரங் மிக நெருக்கமாக 203.6 என்ற புள்ளிகள் வரை வந்தார்.
ககன் நரங் காமன்வெல்த் போட்டிகளில் வெல்லும் 9வது பதக்கம் இது. முதன் முதலாக இப்போது வெள்ளி வென்றார்.
2006ஆம் ஆண்டு மெல்பர்னில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளிலும் பிறகு 2010ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போட்டிகளிலும் தலா 4 தங்கப்பதக்கங்களை ககன் நரங் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம இந்தியா துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் மட்டும் 12 பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தப் பதக்கப்பட்டியலில் இந்தியா தற்போது 7 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் 25 பதக்கங்கள் எடுத்து 4ஆம் இடத்தில் உள்ளது.