Published : 15 Nov 2023 08:11 AM
Last Updated : 15 Nov 2023 08:11 AM

“எது வேண்டுமானாலும் நடக்கும்” - நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

மும்பை: உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இன்று நியூஸிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது:

அரை இறுதியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நியூஸிலாந்து அணியின்கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்தார். இதுகுறித்து மும்பையில் நேற்றுசெய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய வீரர்கள் தங்களது திறமையைக் காட்டியுள்ளனர். லீக் சுற்றில்ஒரு போட்டியில் கூட தோல்வியுறாமல் இந்திய அணிஅரை இறுதிக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் நியூஸிலாந்து அணி, வெற்றி வாய்ப்பற்ற அணி என்று கருதப்பட்டு நாக்-அவுட் சுற்றை அடைந்துள்ளது.

எங்கள் முழுமைத் திறமையையும் வெளிப்படுத்தி விளையாடினால் போட்டி நாளில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

அரை இறுதி ஆட்டத்தில் 2 அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்திய அணி மிகச் சிறந்தஅணி என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும். ஆனால், தொடரின் இறுதிக்கட்டத்தை எட்டும்போது எல்லாவற்றையும் முதலில் இருந்துதான் தொடங்கியாக வேண்டும்.

குறிப்பிட்ட அந்த நாளில் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். நாங்கள் ஓர் அணியாக எங்களின் திட்டங்களுக்குதான் அதிக முக்கியத்துவமும் கவனமும் கொடுக்கப் போகிறோம். மும்பை வான்கடே மைதானத்தில் குவியவுள்ள 33 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களும் இந்திய அணிக்குதான் ஆதரவு தெரிவிக்கப் போகிறார்கள். மைதானம் முழுவதும் இந்திய அணியின் சீருடையான, நீல நிறத்தில்தான் காட்சியளிக்கப் போகிறது. கிரிக்கெட்டின் மீது அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட கூட்டத்தை நாளை பார்க்கலாம். இந்த மாதிரியான கூட்டத்துக்கு முன்பாக ஆடுவதும் ஒரு வகையில் சிறப்பான விஷயம்தான்.

இப்படி ஒரு சூழலில் மகிழ்ச்சியுடன் அனுபவித்து விளையாட நான் விரும்புகிறேன். இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக உலகக்கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது. இந்த வாய்ப்பை எதிர்நோக்கி நான் ஆர்வமுடன் காத்திருக்கிறேன்

ஆல்-ரவுண்ட் ஹர்திக் பாண்டியா இல்லாமலும், சிறப்பாக பேலன்ஸ் செய்து விளையாடி வருகிறது. அவர் இல்லாத குறையை இந்திய அணி நிர்வாகம் மிகவும் அருமையான முறையில் பூர்த்தி செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x