சென்னையில் நவ.18-ல் சர்வதேச செஸ் போட்டி!

சென்னையில் நவ.18-ல் சர்வதேச செஸ் போட்டி!
Updated on
1 min read

சென்னை: சீயோன் மற்றும் ஆல்வின் குழுமப் பள்ளிகள் சார்பில் சர்வதேச ஓபன் ஃபிடே ரேட்டிங் ஓபன் செஸ் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இந்த போட்டி சென்னை மப்பேடில் உள்ள சீயோன் சர்வதேச பள்ளியில் வரும் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற இந்த போட்டியை மவுண்ட் செஸ் அகாடமி மற்றும் தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் இணைந்து நடத்துகிறது. முதல் 30 இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகையும், கோப்பையும் பரிசாக வழங்கப்படும். இதுதவிர 60 பேருக்கு ரொக்கப் பரிசும், 6 பேருக்கு ஆறுதல் பரிசும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட உள்ளது.

இந்தத் தொடரில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200 வீரர்கள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். போட்டியில் கலந்து கொள்வதற்கு நுழைவு கட்டணம் ரூ.1,500 ஆகும். போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் 14-ம் தேதிக்குள் தங்களது பெயரை இணையதளம் வழியாக பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in