

சென்னை: தமிழ்நாடு அட்யா பட்யா சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அட்யா பட்யா சங்கம் ஆகியவை இணைந்து 17-வது ஜூனியர் அட்யா பட்யா மாநில சாம்பியன்ஷிப் போட்டியை பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள சந்திரா மெட்ரிக் பள்ளியில் நடத்தியது. இதில் ஆடவர் பிரிவில் 16 அணிகளும், மகளிர் பிரிவில் 14 அணிகளும் கலந்து கொண்டன. இந்த சாம்பியன்ஷிப்பில் 17 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
இதில் ஆடவர் பிரிவில் ஈரோடு மாவட்ட அணி முதலிடம் பிடித்தது. திருவள்ளூர் மாவட்டம் 2-வது இடத்தையும், 3-வது இடத்தை செங்கல்பட்டு மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் பெற்றன. மகளிர் பிரிவிலும் ஈரோடு மாவட்ட அணி முதலிடம் பிடித்தது. தேனி மாவட்டம் 2-வது இடத்தையும், 3-வது இடத்தை திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அணிகளும் பெற்றன. சிறந்த வீரராக ஆடவர் பிரிவில் ஈரோடு அணியை சேர்ந்த மோனிஷும், மகளிர் பிரிவில் தேனி அணியை சேர்ந்த கோபிகாவும் தேர்வானார்கள்.