

சென்னை ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 8 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - புனே சிட்டி எப்சி அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி 9 ஆட்டத்தில் 5 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் புனே அணி 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி தனது கடைசி ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. தடை காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத சென்னை அணி கேப்டன் ஹென்றிரிக் செரேனோ இன்று களமிறங்குகிறார்.