

2016, 2020-ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வதற்கு புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது மத்திய விளையாட்டு அமைச்சகம்.
“ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கான இலக்கை நோக்கிய திட்டம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீரர், வீராங்கனைகளை கண்டறிய ஒரு குழு அமைக்கப்படுகிறது. அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட், துப்பாக்கி சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா உள்ளிட்டோர் சேர்க்கப்படவுள்ளனர்.