வில்லியம்சன் பந்து வீச ஐசிசி தடை

வில்லியம்சன் பந்து வீச ஐசிசி தடை
Updated on
1 min read

நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் கேன் வில்லியம்சனின் பந்துவீச்சு விதிமுறைகளுக்கு புறம்பாக இருப்பதால் சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கு தடை விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து வில்லியம்சனின் பந்துவீச்சு குறித்து மறு ஆய்வு செய்ய ஐசிசி முடிவெடுத்தது. அதன்படி கார்டிப் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில் அவருடைய பந்துவீச்சு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அதில் அவர் பந்துவீசும்போது பெரும்பாலான நேரங்களில் அவருடைய முழங்கை ஐசிசியால் அனுமதிக்கப்பட்ட அளவான 15 டிகிரிக்கு மேல் வளைவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி விதிமுறைக்கு புறம்பாக பந்துவீசியதாக தடை விதிக்கப்பட்ட முதல் நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் ஆவார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in