இங்கிலாந்து கேப்டன் பட்லர்
இங்கிலாந்து கேப்டன் பட்லர்

ODI WC 2023 | ஒருநாள் கிரிக்கெட்டில் மிக மோசமான தோல்வியை தழுவிய இங்கிலாந்து!

Published on

மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளது இங்கிலாந்து. இது ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த அணியின் மிக மோசமான தோல்வியாக அமைந்துள்ளது.

இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களம் கண்டது. ஆனாலும் 4 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டை டி20 பாணியில் இங்கிலாந்து அணுகுவது இதற்கு காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் மோசமான தோல்வி

  • 2023 - மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 229 ரன்களில் தோல்வி
  • 2022 - மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 221 ரன்களில் தோல்வி
  • 2018 - கொழும்பு: இலங்கைக்கு எதிராக 219 ரன்களில் தோல்வி
  • 1994 - கிங்ஸ்டவுன்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 165 ரன்களில் தோல்வி
  • 1999 - மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 162 ரன்களில் தோல்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in