

மெல்பர்ன் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2-வது சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருசா, 7-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபின், 9-ம் நிலை வீரரான வாவ்ரிங்கா ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 6 முறை சாம்பியனான செர்பியாவின் ஜோகோவிச், 46-ம் நிலை வீரரான பிரான்சின் கேல் மோன்பில்சுடன் மோதினார். 2 மணி நேரம் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 4-6, 6-3, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மோன்பில்சுக்கு எதிராக ஜோகோவிச்சின் 15-வது வெற்றியாக இது அமைந்தது. ஜோகோவிச் 3-வது சுற்றில் ஸ்பெயினின் ஆல்பர்ட் ரமோஸ் வினோலசுடன் மோத உள்ளார்.
2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 6-4, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜன் லெனார்டு ஸ்ட்ரூஃபையும், 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 6-1, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த பீட்டர் கோஜவ்ஸ்கியையும் வீழ்த்தினர்.
9-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா, 86-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெனிஸ் சாண்ட்கிரெனுடன் மோதினார். ஒரு மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வாவ்ரிங்கா 2-6, 1-6, 4-6 என்ற நேர் செட்டில் தோல்வியைடந்தார். 7-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபின், 57-ம் நிலை வீரரான பிரான்சின் ஜூலியன் பென்னேட்டோவை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 54 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டேவிட் கோபினை 1-6, 7-6 (7-5), 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார் ஜூலியன் பென்னேட்டோ.
13-ம் நிலை வீரரான அமெரிக்காவின் சேம் குயரே 4-6, 6-7 (6-8), 6-4, 2-6 என்ற செட் கணக்கில் 85-ம் நிலை வீரரான ஹங்கேரியின் மார்டன் புசோவிக்ஸிடம் வீழ்ந்தார். 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் 6-7 (6-8), 3-6, 6-3, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெனிஸ் குட்லாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 48 நிமிடங்கள் நடைபெற்றது. 12-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் ஜூயன் மார்ட்டின் டெல் போட்ரோ 6-4, 7-6 (7-4), 6-7 (0-7), 6-4 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் கரேன் கச்னோவையும், 19-ம் நிலை வீரரான செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் 6-3, 2-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் குயிலர்மோ கார்சியா லோபஸையும் வீழ்த்தி 3-வது சுற்றில் கால் பதித்தனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், 81-ம் நிலை வீராங்கனையான கனடாவின் யூஜெனி பவுச்சார்டை 6-2, 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார். 3-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, 88-ம் நிலை வீராங்கனையான தைவானின் சு வேயியை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 59 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முகுருசா 6-7 (1-7), 4-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.
9-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஜோஹன்னா கோண்டாவும் 2-வது சுற்றுடன் வெளியேறினார். 127-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் பெர்னார்டா பெரோவை எதிர்த்து விளையாடிய அவர், 4-6, 5-7 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6-1, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் 14-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் அனஸ்டசிஜா செவஸ்டோவாவையும், 26-ம் நிலை வீராங்கனையான அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 2-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் உக்ரைனின் லிசாவையும் வீழ்த்தினர்.
மற்ற ஆட்டங்களில் 6-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-1, 6-1 என்ற நேர் செட்டில் பிரேசிலின் பீட்ரிஸையும், 8-ம் நிலை வீராங்கனையான பிரான்சின் கரோலின் கார்சியா, 6-7 (3-7), 6-2, 8-6 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் மார்க்கெட்டா வாண்ட்ரோசோவாவையும், 21-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் குரோஷியாவின் டோனா வேகிக்கையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
2-வது சுற்றில் பயஸ் ஜோடி
ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், புரவ் ராஜா ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்டில் ஜார்ஜியாவின் நிக்கோலஸ், ஆஸ்திரியாவின் ஆன்ட்ரியாஸ் ஹைதர் ஜோடியை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் திவிஜ் சரண், அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி 7-6, 6-4 என்ற செட்டில் ருமேனியாவின் மாரிஸ் கோபிள், செர்பியாவின் விக்டர் டிரோசிக் ஜோடியையும் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாஸலின் ஜோடி 6-2 7-6 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் ரேயன் ஹாரிசன், கனடாவின் வசக் போஸ்பிஸில் ஜோடியையும்