ஆண்டர்சனுடன் மோதல்: ஜடேஜாவுக்கு அபராதம்

ஆண்டர்சனுடன் மோதல்:  ஜடேஜாவுக்கு அபராதம்
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் தகராறில் ஈடுபட்டதாக இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அவரது ஆட்டத் தொகையில் 50% அபராதமாகச் செலுத்த ஆட்ட நடுவரான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் பூன் உத்தரவிட்டுள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது இந்தியா லெவல் 3 புகாரை அளித்தது. பதிலுக்கு ஜடேஜா மீது இங்கிலாந்து புகார் அளித்தது.

லெவல் 3 புகாரின் படி 4 டெஸ்ட் அல்லது 2 டெஸ்ட் போட்டிகள் நீக்கப்படும் அபாயம் இருந்தது. ஆனால் டேவிட் பூன் மேற்கொண்ட விசாரணையில் ஜடேஜா லெவல் 1 விதிமுறையை மீறியதாகக் குற்றம்சாட்டப்பட்டார்.

இதனால் ஆட்டத்தொகையில் 50% அபராதத்துடன் தப்பினார் ஜடேஜா. ஆண்டர்சன் மீதான விசாரணை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது ஜடேஜாவும் ஆண்டர்சனும் வாக்குவாதத்தில் ஈடுபட, கடைசியில் ஆண்டர்சன், ஜடேஜாவைத் தள்ளி விட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் இந்தியா புகார் அளிக்க, இங்கிலாந்து பதில் புகார் செய்தது. இந்திய கேப்டன் தோனி மிகவும் சூசகமாக ஜடேஜாவை ஆண்டர்சன் பிடித்துத் தள்ளியதைக் குறிப்பிட்டதோடு, எப்போதும் இந்திய வீரர்களே பாதிக்கப்படுகின்றனர் என்று விரிவான பேட்டியும் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in