ODI WC 2023 | டேவிட் மலான், டாப்ளே அசத்தல் - வங்கதேசத்தை 137 ரன்களில் வென்றது இங்கிலாந்து

ODI WC 2023 | டேவிட் மலான், டாப்ளே அசத்தல் - வங்கதேசத்தை 137 ரன்களில் வென்றது இங்கிலாந்து
Updated on
1 min read

தர்மசாலா: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் போட்டியில் வங்கதேசத்தை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

இமாசலப் பிரதேசத்தின் தர்மசலாவில் இன்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி வீரர் டேவிட் மலான் 107 பந்துகளில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 140 ரன்கள் எடுத்தார். அதேபோல், ஜோ ரூட் 68 பந்துகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரி உள்பட 82 ரன்கள் சேர்த்தார். பேர்ஸ்டோவ் 52 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ், மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹிம் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். லிட்டன் தாஸ்பொறுப்புடன் ஆடி 76 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதேபோல், முஷ்பிகுர் ரஹிம் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்றவர்களில் ஹிருடோய் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுக்க, இதர வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், 48.2 ஓவர்களில் வங்கதேச அணி 227 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பில் ரீஸ் டாப்ளே 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நடப்பு தொடரில் இங்கிலாந்து அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in