

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக். 1) ஒரே நாளில் மட்டும் சுமார் 15 பதக்கங்களை பல்வேறு விளையாட்டுப் பிரிவில் வென்றுள்ளது இந்திய அணி. 3 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் வென்றனர் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் தடகளம், துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், கோல்ஃப், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் இன்று பதக்கம் வென்றுள்ளனர். மொத்தமாக 13 தங்கம், 21 வெள்ளி மற்றும் 19 வெண்கல பதக்கத்துடன் 53 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா உள்ளது. சீனா, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.