Asian Games 2023 | தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்தியா 

Asian Games 2023 | தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்தியா 

Published on

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியின் 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (அக்டோபர் 1, ஞாயிற்றுக்கிழமை) காலை முதலே இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் மும்முரமாக பங்கேற்றுள்ளனர்.

தடை தாண்டும் ஓட்டம்: இன்று நடைபெற்ற 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்று அசத்தியுள்ளார். 8 நிமிடம் 19.54 வினாடிகளில் இலக்கை கடந்து பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு 12 தங்கம் கிடைத்துள்ளது. பதக்கப்பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவினாஷ் சாப்ளே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in