1975 டு 2019 | உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்ட நாயகன் விருதை வென்ற வீரர்கள்!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அடுத்த சில நாட்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்தச் சூழலில் 1975 முதல் 2019 வரையிலான உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற வீரர்கள் குறித்து பார்ப்போம்.

‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. தற்போது 10 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன.

இதுவரையில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களின் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன்கள்

  • 1975 - கிளைவ் லாயிட்
  • 1979 - விவியன் ரிச்சர்ட்ஸ்
  • 1983 - மொகிந்தர் அமர்நாத்
  • 1987 - டேவிட் பூன்
  • 1992 - வாசிம் அக்ரம்
  • 1996 - அரவிந்தா டி சில்வா
  • 1999 - ஷேன் வார்ன்
  • 2003 - ரிக்கி பாண்டிங்
  • 2007 - ஆடம் கில்கிறிஸ்ட்
  • 2011 - மகேந்திர சிங் தோனி
  • 2015 - ஜேம்ஸ் ஃபால்க்னர்
  • 2019 - பென் ஸ்டோக்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in