

இந்திய அணி பயிற்சியின்போது தோனியும் பாண்டியாவும் ஓட்டப்பந்தயம் விளையாடிய வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்தியா - இலங்கை இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது ஒருநாள் போட்டி மொஹாலியில் இன்னும் சற்று நேரத்தில் துவங்கவிருக்கிறது. செவ்வாய்க்கிழமை அன்று வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டது இந்திய அணி. அப்போது இந்திய அணியின் முன்னாள் தலைவரும், இந்நாள் விக்கெட் கீப்பருமான தோனிக்கும், அணியின் இளைய நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே விளையாட்டாக ஓட்டப்பந்தயம் நடந்தது.
மெதுவாக ஜாக் செய்ய ஆரம்பித்து பின்னர் இருவரும் ஓடும் அந்த வீடியோவில், இறுதியில் தோனியே ஜெயித்தார். இத்தனைக்கும் தோனி பாண்டியாவை விட 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் ஒருநாள் போட்டியில், மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, தோனி மட்டுமே நின்று ஆடி அணி ஒரு கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியின் உடற்திறன், விளையாடும் அளவுக்கு அவர் உறுதியாக இருக்கிறாரா என்றெல்லாம் அவரது விமர்சகர்கள் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக, தோனியின் ஆட்டமும் ஓட்டமும் அமைந்திருப்பது தோனி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
வீடியோ இணைப்பு: