Published : 06 Dec 2017 07:55 PM
Last Updated : 06 Dec 2017 07:55 PM

விராட் கோலியுடன் இத்தாலியில் திருமணமா? - அனுஷ்கா ஷர்மா தரப்பு மறுப்பு

டிசம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இத்தாலியில் திருமணம் முடிக்கவுள்ளதாக எழுந்த செய்திகளை அனுஷ்கா ஷர்மா தரப்பு மறுத்துள்ளது.

டிசம்பர் 9-11 தேதிகளில் இவர்கள் திருமணம் இத்தாலியில் நடைபெறலாம் என்று இந்தியா டுடே செய்தி ஒன்று தெரிவிக்க அனுஷ்கா ஷர்மா பிரதிநிதி இந்தச் செய்தியை மறுத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த யூகம் வதந்தியாக உருவெடுத்ததாக அனுஷ்கா ஷர்மா தரப்பு தெரிவித்துள்ளது.

2013-ம் ஆண்டிலிருந்து இருவரும் பழகி வருகின்றனர். விளம்பரம் ஒன்றில் இருவரும் சேர்ந்து நடித்தது முதல் பழக்கம் ஏற்பட்டது.

2015 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஆட்டங்களில் அனுஷ்கா ஷர்மாவைப் பார்க்க முடிந்தது.

இவர்கள் இருவரது திருமணம் பற்றி வதந்திகள் எழுவது இது முதல் முறையல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x