டைமண்ட் லீக் தடகளப் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா
Updated on
1 min read

டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

முன்னணி தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகளத்தின் இறுதிச்சுற்று போட்டி அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். ஒலிம்பிக்கில் தங்கம், கடந்த மாதம் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றிருந்ததால் நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

போட்டியின்போது நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. செக் குடியரசு வீரர் ஜக்குப் வட்லெஜ்ச் 84.24 மீ. தூரம் எறிந்து தங்கத்தைக் கைப்பற்றினார். பின்லாந்து வீரர் ஆலிவர் ஹெலண்டர் 83.74 எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in