SL vs PAK | பாபர் அஸமின் விக்கெட்டை தட்டித் தூக்கிய துனித் வெல்லலகே!

பாபர் விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் துனித்
பாபர் விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் துனித்
Updated on
1 min read

கொழும்பு: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸமின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் இலங்கையின் இளம் வீரர் துனித் வெல்லலகே.

கொழும்பில் நடைபெற்று வரும் இந்தப் போட்டி மழை காரணமாக இரண்டு அணிகளுக்கும் தலா 45 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அப்துல்லா ஷபீக் உடன் இணைந்து வலுவான கூட்டணி அமைக்க பாபர் முயற்சித்தார். ஆனாலும் அதை தகர்த்தார் துனித் வெல்லலகே.

16-வது ஓவரில் பாபருக்கு அபாரமாக பந்து வீசி, அவரை முன் வந்து ஆட நிர்பந்தித்தார் துனித். பந்தை பாபர் மிஸ் செய்ய இலங்கையின் விக்கெட் கீப்பர் குசல் மென்டிஸ், நொடி பொழுதில் ஸ்டம்பிங் செய்தார். இதன் மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பாபரை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான துனித் வெல்லலகே, 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அந்தப் போட்டியில் சிறப்பாக பேட் செய்தும் அவர் அசத்தி இருந்தார். அவரது ஆட்டம் உலக கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in