

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான துனித் வெல்லலகே 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இலங்கை அணிக்காக இளம் வயதில் 5 விக்கெட்களை வீழ்த்தி வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் துனித் வெல்லலகே.
அவருக்கு 20 வயது 246 நாட்கள் ஆகிறது. இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 வயது 65 நாட்களில் ஹரிதா புத்திகா 5 விக்கெட்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. 5 விக்கெட்கள் வீழ்த்திய இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லலகே தெரிவித்தது.
“நான் எனது இயல்பான மாறுபாடுகளுடன் பந்துவீச முயற்சித்தேன். அதேவேளையில் ரன்களையும் அதிகம் விட்டுக் கொடுக்கவில்லை. எனது கனவு விக்கெட் விராட் கோலி தான். ஆடுகளத்தின் மேற்பரப்பு சீரற்ற வகையில் இருந்தது. இதில் பேட் செய்வது கடினம்” என்றார். இந்திய அணிக்கு எதிரான சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் 46 பந்துகளில் 42 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் தான் வென்றார்.