40-ம் நிலை வீராங்கனையை வீழ்த்தினார் சுதிர்தா

40-ம் நிலை வீராங்கனையை வீழ்த்தினார் சுதிர்தா
Updated on
1 min read

பியோங்சாங்: ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் உள்ள பியோங்சாங் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, உலகத் தரவரிசையில் 40-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் ஸு யு ஷெனை எதிர்த்து விளையாடினார். இதில் 104-வது இடத்தில் உள்ள சுதிர்தா முகர்ஜி முதல் செட்டை 10-12 என இழந்தார். எனினும் அடுத்த 3 செட்களையும் ஆக்ரோஷமாக விளையாடி 11-8, 11-7, 11-7 என கைப்பற்றி வெற்றியை வசப்படுத்தினார்.

ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானவ் தாக்குர், மனுஷ் ஷா ஜோடி உஸ்பெகிஸ்தானின் அப்துல் அசிஸ் அனோர்போவ், குட்பிடிலோ டெஷாபோவ் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி ஜோடி 11-1, 13-11, 10-12, 11-7 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் ஏஞ்சலினா ரோமானோவ்ஸ்கயா, சர்வினோஸ் மிர்கடிரோவா ஜோடியை தோற்கடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in