Published : 08 Sep 2023 05:33 AM
Last Updated : 08 Sep 2023 05:33 AM

ஐஎஸ்எல் அட்டவணை வெளியீடு: தொடக்க ஆட்டத்தில் கேரளா - பெங்களூரு அணிகள் செப்.21-ல் மோதல்

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 10-வது சீசனுக்கான அட்டவணையின் முதல் பகுதி வெளியிடப்பட்டுள்ளது. இதில் தொடரின் தொடக்க ஆட்டத்தில் வரும் 21-ம்தேதி கேரளா பிளாஸ்டர்ஸ் - பெங்களூரு எப்சி மோதுகின்றன. இந்த ஆட்டம் கொச்சியில் நடைபெறுகிறது.

சென்னையின் எப்சி தனது முதல் ஆட்டத்தில் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 10-வது சீசன் போட்டிகள் வரும் 21-ம் தேதி கொச்சியில் தொடங்கும் என போட்டி அமைப்பாளர்கள் நேற்று அறிவித்தனர். 12அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரின் முதல்பகுதி அட்டவணை மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் டிசம்பர் 29-ம் தேதி வரை நடைபெறும் ஆட்டங்கள் இடம் பெற்றுள்ளன. தொடக்க ஆட்டத்தில் வரும் 21-ம் தேதி கேரளா பிளாஸ்டர்ஸ் - பெங்களூரு எப்சி மோதுகின்றன.

இந்த சீசனில் பஞ்சாப் எப்சி அறிமுகமாகிறது. அந்த அணி ஐ-லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து ஐஎஸ்எல் தொடரில் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை, கொல்கத்தா, கொச்சி, குவாஹாட்டி, ஹைதராபாத், புவனேஷ்வர், கோவா, பெங்களூரு, டெல்லி, ஜாம்ஷெட்பூர், மும்பை ஆகிய 11 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

நடப்பு சாம்பியனான மோகன் பகான் தனது முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான பஞ்சாப் எப்சியுடன் 23-ம் தேதி மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான சென்னையின் எப்சி, ஒடிசா எப்சி-யுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் புவனேஷ்வரில் நடைபெறுகிறது.

கடந்த சீசனில் லீக் சுற்றில் அதிக வெற்றிகளை குவித்து ஷீல்ட் கைப்பற்றிய மும்பை சிட்டி எப்சிதனது முதல் ஆட்டத்தில் 24-ம் தேதி குவாஹாட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைட்டெடு அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் மோகன் பகான் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் இடையிலான ஆட்டம் அக்டோபர் 28-ம் தேதி நடைபெறுகிறது.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நடத்தும் போட்டிகள் நடைபெறும் காலக்கட்டங்களில் ஐஎஸ்எல்தொடரின் ஆட்டங்கள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அக்டோபர் 9 முதல் 17 வரையும், நவம்பர் 13 முதல் 21 வரையும் ஐஎஸ்எல் தொடரின் ஆட்டங்கள் நடத்தப்படாது. ஐஎஸ்எல் தொடரின் 2-வது கட்ட அட்டவணை இந்த ஆண்டின்பிற்பகுதியில் வெளியிப்படும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்முறை ஐஎஸ்எல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை வையாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது. லீக் ஆட்டங்கள் அனைத்தும் இரவு 8 மணிக்கு நடைபெறும். ஒரே நாளில் இரு போட்டிகள் இருந்தால் முதல் ஆட்டம் மாலை 5.30 மணிக்கு தொடங்கும்.

ஐஎஸ்எல் கால்பந்து தொடரானது சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறும் காலக்கட்டத்தில் நடைபெறுகிறது. ஐஎஸ்எல் கால்பந்து தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு இரு நாட்கள் முன்னதாக (19-ம் தேதி) ஆசிய விளையாட்டு போட்டியில் கால்பந்து ஆட்டங்கள் தொடங்குகின்றwன. இந்த ஆட்டங்கள் அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கால்பந்து அணியில் இடம் பெற்றுள்ள 22 வீரர்களும் ஐஎஸ்எல் தொடரில் பல்வேறு அணிகளில் இடம் பிடித்துள்ளனர். இதில் பெங்களூரு எப்சி அணியில் 6 வீரர்களும், மும்பை சிட்டி எப்சி அணியில் 3 வீரர்களும், எப்சி கோவா, மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால், ஒடிசா எப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகிய அணிகளில் தலா 2 வீரர்களும், பஞ்சாப் எப்சி, சென்னையின் எப்சி ஆகிய அணிகளில் தலா ஒரு வீரர்களும் உள்ளனர்.

இவர்களை ஆசிய விளையாட்டு போட்டிக்காக விடுவிக்க சில கிளப்கள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே அகில இந்திய கால்பந்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷாஜி பிரபாகரன், தேசிய நலனைக் கருத்தில் கொண்டு ஆசிய விளையாட்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வீரர்களை விடுவிக்குமாறு ஐஎஸ்எல் தொடரின் 10 கிளப்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும், ஆசிய விளையாட்டு போட்டி பிபா சர்வதேச போட்டியின் சாளரத்தில் வராததால் ஐஎஸ்எல் கிளப்புகள் இந்திய அணி வீரர்களை விடுவிப்பது கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேதிஎதிரணிஇடம்நேரம்செப்.23ஒடிசாபுவனேஷ்வர்மாலை 5.30 மணிசெப்.29நார்த் ஈஸ்ட் யுனைட்டெடுகுவாஹாட்டிஇரவு 8 மணிஅக்.7மோகன் பகான்சென்னைஇரவு 8 மணிஅக்.23ஹைதராபாத்ஹைதராபாத்இரவு 8 மணிஅக்.29பஞ்சாப்சென்னைஇரவு 8 மணிநவ.5கோவாசென்னைஇரவு 8 மணிநவ.25ஈஸ்ட் பெங்கால்சென்னைமாலை 5.30 மணிநவ.29கேரளாகொச்சிஇரவு 8 மணிடிச.7ஜாம்ஷெட்பூர்ஜாம்ஷெட்பூர்இரவு 8 மணிடிச.13பெங்களூருசென்னைஇரவு 8 மணிடிச.18பஞ்சாப்டெல்லிஇரவு 8 மணிடிச.28 மும்பைமும்பைஇரவு 8 மணி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x