Published : 07 Sep 2023 08:33 AM
Last Updated : 07 Sep 2023 08:33 AM
பியோங்சாங்: ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் அரை இறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.
தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா - சீன தைபே அணிகள் நேற்று மோதின. இதில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. முதல் ஆட்டத்தில் சீன தைபேவின் ஹுவாங் யுவான் 11-6, 11-6, 11-9, என்ற நேர் செட்டில் இந்தியாவின் ஷரத் கமலை வீழ்த்தினார்.
அடுத்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள யன் ஜு லின் 11-5, 11-6, 12-10 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சத்தியனை தோற்கடித்தார். ஹர்மீத் தேசாய் 6-11, 7-11, 11-7, 9-11 என்ற செட் கணக்கில் சென் ஜுயி கவோவிடம் வீழ்ந்தார். இந்த 3 ஆட்டங்களும் 82 நிமிடங்களில் முடிவடைந்தன. அரை இறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT