மீராபாய் சானுவின் சாதனையை முறியடித்தார் ஜியாங்!

ஜியாங் ஹுய்ஹுவா
ஜியாங் ஹுய்ஹுவா
Updated on
1 min read

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 49 கிலோ எடை பிரிவில் சீன வீராங்கனை ஜியாங் ஹுய்ஹுவா கிளீன் அண்ட் ஜெர்க்கில் 120 கிலோ எடையை தூக்கி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானு கடந்த 2021-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப்பில் 119 கிலோ எடையை தூக்கியதே சாதனையாக இருந்தது. இதனை தற்போது முறியடித்துள்ளார் ஜியாங் ஹுய்ஹுவா.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in